Friday, October 25, 2013

ஐகோர்ட்டு அதிரடி! கணினி ஆசிரியர்கள் மகிழ்ச்சி!

காலியாக உள்ள 1440 கணினி ஆசிரியர் (Computer Teacher) பணியிடங்களை வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் நிரப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டதைத் தொடர்ந்து கணினி ஆசிரியர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். 1998ம் ஆண்டு எல்காட் நிறுவனத்தால் நிரப்பப்பட்ட தற்காலிக கணினி ஆசிரியர்களை தேர்வு மூலம் பணி நிரந்தரம் செய்ய 2006ம் ஆண்டு தமிழக அரசால் முடிவு செய்யப்பட்டது. அதன்பிறகு 2008, 2010 மற்றும் 2012ம் ஆண்டுகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட கணினி ஆசிரியருக்கான சிறப்புத்தேர்வுகளில் முறையே 894, 125 மற்றும் 15 எண்ணிகையிலான ஆசிரியர்கள் மட்டும் 50% மதிப்பெண்களுக்கும் மேல் பெற்று வெற்றி பெற்றனர். அதனைத் தொடர்ந்து 1440 தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து அவர்களில் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதிகள் ஆர்.பானுமதி மற்றும் கே.கே. சசிதரன் அவற்றை தள்ளுபடி செய்து, "தகுதித் தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது சரியே" என கூறினர். மேலும் அவர்கள் கூறியதாவது: "அந்த ஆசிரியர்களுக்கு இரண்டுக்கும் மேற்பட்டு முறைகள் வாய்ப்பு வழங்கப்பட்ட போதும், அவர்கள் தேர்ச்சி பெறவில்லை. எனவே அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது சரியே. இருந்த போதும் அவர்களின் பெயர்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அவர்கள் முன்னே பெற்றிருந்த பதிவு மூப்புடன் சேர்க்கலாம். தற்போதைய அரசின் கொலைப்படி அவர்கள் ஆசிரியர் தேர்வு தகுதித் தேர்விலும் கலந்து கொள்ளலாம். அப்பொழுது வயது வரம்பை தளர்த்தக் கோரி அவர்கள் ஆசிரியர் தேறு வாரியத்தைக் கேட்டுக் கொள்ளலாம்." மேலும் காலியாக உள்ள அந்த 1440 கம்ப்யூட்டர் டீச்சர் பணியிடங்கள் 31-1-2014க்குள் நிரப்பப்பட வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டனர். *இந்த செய்தியை படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் கணினி படித்தவாரக இருந்தால் நீங்கள் குறித்துக் கொள்ளவேண்டியது. நீதிபதிகள் ஆசிரியர் நியமனம் பற்றி தெளிவாக கூறவில்லை. அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு மே 2014க்கு பிறகுதான் நடத்தப்படக் கூடும். இந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்விலோ பெரும்பாலான கணினி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கவில்லை. அடுத்த ஜனவரிக்குள் பணி நியமனம் முடிக்கப்பட வேண்டிய நிலையில் அதற்கு முன்பாக கணினி ஆசிரியர்களுக்கு மட்டும் தனியாக தேர்வு நடத்தப்படலாம் அல்லது பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படலாம்.

Thursday, October 24, 2013

கணினி ஆசிரிய பெருமக்களுக்கு வணக்கம்.

சற்றே சிந்திக்க வேண்டிய விசயம். இவ்வளவு ஆண்டுகளாகத்தான் எதுவும் தெரியாமல் இருந்து விட்டோம். எல்லாம் தெரிந்தும் இனி அமைதியாக இருப்பதில் நியாயமில்லை!. என்ன புரியவில்லையா! நண்பர்களே, எல்லாம் பாடத்துக்கும் ஆசிரியர்கள் ஏதேனும் ஒரு வகையில் நியமிக்கப்படுக்கின்றனர். ஆனால் கணினி பாடத்துக்கு -------------------------------------------- ? காரணம். நம்மிடையே ஒற்றுமையில்லாததே. ஒரு அலுவலகத்திலோ அல்லது பள்ளியிலோ கணினியில் பணிபுரியும் நபர் இல்லையெனில் அன்றைய பணி முற்றிலும் முடங்கி போய்விடும். ஒரு பள்ளியைப் பொருத்தவரை கணினி ஆசிரியர் என்பவர் மிக முக்கியமானவர். ஒரு தலைமை ஆசிரியர் இல்லாமல் பள்ளி இயங்கும்.ஆனால் கணினி ஆசிரியர் இல்லாமல் பள்ளியானது இயங்காது என்பது யாவரும் அறிந்த உண்மை. ஆனால் ஒரு சிலரே அறிந்த உண்மை , பள்ளியில் கணினி ஆசிரியர் பாடம் நடத்துவதை தவிர (மற்ற) அலுவலக பணியை (mail) மட்டுமே செய்கின்றனர். ஆனால் அலுவலக பணிக்காக நியமிக்கப்பட்டவர்கள் என்ன செய்கிறார்கள். யாருக்குத் தெரியும்?. “குறைவான சம்பளத்தில் நிறைவான பணியை செய்யும் பகுதி நேர ஆசிரியர்கள்”. “அதிக சம்பளத்தில் குறைவான பணியை மட்டும் செய்யும் அலுவலக பணியாளர்கள்” இதை கவுனிக்குமா தமிழக அரசு ! விடிவு காலம் எப்போது ! யோசியுங்கள் ஒன்று சேர்வோம். கணினி ஆசிரியர் இல்லையேல் இவ்வுலகமே இயங்காது. இத்தளத்தினை பார்க்கும் அனைவரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டுகிறேன். கணினி ஆசிரியர்கள் தங்களுக்கு தெரியும் தகவலை என்(7373482279) மொபைல் எண்ணிற்கு அனுப்பி இத்தளத்தில் வெளியிட உதவுங்கள்.

Tuesday, October 22, 2013

ஆசிரியர் பற்றாக்குறை: அரசு பள்ளிகளில் பூட்டப்பட்ட கம்ப்யூட்டர் லேப்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பற்றாக் குறையால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், 2,000த்துக்கும் மேற்பட்ட, அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஐ.டி., துறையின் மீதான மோகத்தில், மாணவ, மாணவியர் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு படிக்க ஆர்வம் காட்டியதால், அனைத்து பள்ளிகளிலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு துவக்கப்பட்டது. இதற்காக எல்காட் மூலம், கம்ப்யூட்டர் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன. கம்ப்யூட்டர் ஆசிரியர்களும், ஒப்பந்த அடிப்படையில், எல்காட் மூலமாகவே, நியமிக்கப்பட்டனர். இவர்களை நிரந்தர அரசுப் பணிக்கு மாற்றும் வகையில், சிறப்பு தேர்வுகளும் நடத்தப்பட்டன. இதில், தேர்ச்சி பெறாதவர்களையும், சலுகை அடிப்படையில், நிரந்தரமாக்கி உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட், "தேர்ச்சி பெறாதவர்களை, உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும்" என, உத்தரவிட்டது. அதனால், இரு மாதங்களுக்கு முன், 500க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதன்பின், கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிநியமனம் இதுவரை நடக்கவில்லை. இந்நிலையில், பல பள்ளிகளில், கம்ப்யூட்டர் லேப் பூட்டப்பட்டு, உபயோகிக்கப்படாமல் உள்ளது. இதனால், அந்த உபகரணங்கள் வீணாவதுடன், மாணவ, மாணவியரின் கல்வித்தரமும் கேள்விக் குறியாகியுள்ளது. இதுதொடர்பாக, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடம், ஒரு பள்ளிக்கு ஒன்று என்ற விகிதத்தில் மட்டுமே இருந்தது. அதில், இருந்தவர்களும் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், கம்ப்யூட்டர் மற்றும் அதுசார்ந்த உபகரணங்களை மாணவர்களுக்கு பயன்படுத்த அனுமதிக்க முடியாத நிலை உருவானது. வேறு ஆசிரியர்களும் பொறுப்பேற்க முடியாது என்பதால், கம்ப்யூட்டர் பாடம் நடத்துவதும், லேப் பயன்படுத்துவதும், பெரும்பாலான பள்ளிகளில் முடியாததாக உள்ளது. தற்காலிக ஆசிரியர்களை நம்பி, பல லட்சம் மதிப்பிலான லேபை ஒப்படைக்க முடியாது என்பதால், உடனடியாக கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Saturday, October 19, 2013

அகஇ - பகுதி நேர ஆசிரியர்களுக்கு விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்து சம்பளத்தை முழுமையாக பிரதி மாதம் 5ம் தேதிக்குள் வழங்கவும், சில விதிமுறைகளை வழங்கி திட்ட இயக்குநர் உத்தரவு
தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ஆசிரிய பெருமக்களுக்கு நன்றி.

Thursday, October 17, 2013

காலவரையற்ற உண்ணாவிரதம்: பகுதி நேர ஆசிரியர்கள் அறிவிப்பு

பகுதி நேர ஆசிரியர்களை, முழு நேர ஆசிரியர்களாக பணியமர்த்தக் கோரி, காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் ராமர், சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு, ஆண்டு மார்ச், 5ம் தேதி தமிழகம் முழுவதும், 16, 549 பேரை பகுதி நேர ஆசிரியர்களாக நியமனம் செய்தது. மாதந்தோறும், 5,000 ரூபாய் சம்பளம் என்றும், வாரத்தில் மூன்று அரை நாள் பணி செய்ய வேண்டும் என்றும், அரசாணை வெளியிட்டது. காலப்போக்கில், பள்ளி தலைமையாசிரியர்கள், எங்களை முழுநேர ஆசிரியராகவே பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, கம்ப்யூட்டர் ஆசிரியர்களை முழுநேர ஆசிரியர்களாக பணியாற்றுமாறு, அனைத்து பள்ளிகளிலும் கட்டாயப்படுத்துகின்றனர். ஆனால், 5,000 ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. எனவே, எங்களை முழுநேர ஆசிரியர்களாக, அரசு நியமிக்க வேண்டும். சேலம், நெய்க்காரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், பகுதிநேர ஆசிரியர் சக்திவேல் பணிபுரிந்து கொண்டிருந்த போது, மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது குடும்பத்துக்கு, தமிழக அரசு, முதல்வர் நிவாரண நிதி வழங்க வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களுக்கு, ஊதிய பட்டியல் வருவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, அனைத்து தலைமையாசிரியர்களுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உரிய நேரத்தில் ஆவணத்தை கொடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், இந்த மாத இறுதியில், காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.