Wednesday, July 31, 2013

2,000 கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு செய்ய அரசு திட்டம்? பணி நீக்கம் செய்யப்பட்ட, 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணியிடங்கள் மற்றும் கூடுதலாகத் தேவைப்படும் பணியிடங்களை நிரப்ப, 2,000 கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நியமனம் செய்ய, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகலாம் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுப்ரீம் கோர்ட் உத்தரவின் அடிப்படையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்த கம்ப்யூட்டர் ஆசிரியர்களில், 652 பேரை, பள்ளிக் கல்வித்துறை, பணி நீக்கம் செய்தது. மாணவர் நலன் கருதி, புதிய ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் வரை, பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்ற கல்வித் துறையின் கோரிக்கையையும், சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது. 652 பேரையும், உடனடியாகப் பணி நீக்கம் செய்ய வேண்டும் என, உத்தரவிட்டதால், அனைவரையும் உடனடியாக, பணி நீக்கம் செய்து, கல்வித்துறை உத்தரவிட்டது. இதனால், மாணவர்களுக்கு, கம்ப்யூட்டர் பாடம் எடுக்க, ஆசிரியர் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. மாற்று ஏற்பாடு குறித்து, ஓரிரு நாளில் முடிவு எடுக்கப்படும் என, கூறப்படுகிறது. புதிய ஆசிரியர்களைத் தேர்வு செய்து, 652 பணியிடங்களை நிரப்பவும், கூடுதலாகத் தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், 2,000 கம்ப்யூட்டர் ஆசிரியர்களைத் தேர்வு செய்ய, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறுகையில், "அரசு உத்தரவிட்டால், கம்ப்யூட்டர் ஆசிரியர்களைத் தேர்வு செய்ய தயாராக உள்ளோம்; இதுவரை, உத்தரவு வரவில்லை" என, தெரிவித்தன.

Monday, July 29, 2013

மாணவர்களே உங்கள் கண்களை பாதுகாக்க எளிய வழிமுறைகள்

"ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்" மாணவர்களே உங்கள் கண்களை பாதுகாக்க எளிய வழிமுறைகள்பது பழமொழி. ஆடி மாதம் துவங்கியது முதல், பலத்த காற்று வீசுகிறது. ரோட்டோரத்தில் மண் அகற்றப்படாமல் உள்ளதால், காற்றின் வேகத்துக்கு புழுதி படலமாக மாறி, வாகன ஓட்டிகள், நடந்து செல்வோரின் கண்களை பதம் பார்க்கிறது. சைக்கிளில் செல்லும் மாணவர்கள், மோட்டார் சைக்கிளில் பயணிப்போர், பலத்த காற்றில் சிக்கி திக்குமுக்காடுகின்றனர். அதிகளவு காற்று வீசும் நேரங்களில், கண்களை பாதுகாப்பது குறித்த போதிய விழிப்புணர்வு பலரிடம் இருப்பதில்லை. கண் மருத்துவர் ஒருவர் கூறியதாவது: "ஒளியை உணரும் மென்மையான உறுப்பு கண்கள்; பார்க்கும் திறனை அளிக்கிறது. கண் பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டும். கண்கள் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் "சி" அவசியம். பால், மீன், முட்டைகோஸ், கேரட், கொத்தமல்லி, பப்பாளி, தக்காளி, சாத்துக்குடி, திராட்சை, இளநீர், நெல்லிக்காய், மாம்பழம் ஆகிய வைட்டமின் நிறைந்த பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும். அனைத்து வகை கீரைகளும் ஆரோக்கியத்துக்கு ஏற்றது. அவற்றை தவிர்க்கக்கூடாது. கண்ணில் தூசி விழுந்தால், கசக்கக் கூடாது; லேசாக கண்களை திறந்து மூடினால், கண்ணில் உள்ள நீரில் முழ்கி அதுவே வந்துவிடும். உறுத்தல் அதிகமாக இருந்தால், சுத்தமான நீரில் கண்களை கழுவலாம். பலத்த காற்று வீசுவதால், டூவீலர்களில் செல்பவர்கள், கண்ணாடி அணிவது அவசியம். சிறிய மண்துகள், தூசிகளால் கண் வலி ஏற்படும். கண் எரிச்சல், கண் சிவந்திருந்தால் மருந்து வாங்கி இரவு தூங்கும் முன் இரண்டு கண்களிலும் ஒரு சொட்டு விடலாம். தொடர்ந்து எரிச்சல் இருந்தால் டாக்டர் ஆலோசனை பெற வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்தால், பார்வை மற்றும் அதன் தன்மையை தெரிந்து கொள்ள முடியும்," என்றார். நன்றி : தினமலர்

கனவு ஆசிரியர் - பெற்றோர்களை ஈர்க்கும் காந்த ஆசிரியர்!

ஊரிலிருந்து 20 கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் அந்தப் பள்ளிக்கூடத்தில் காத்துக்கிடந்து தங்கள் குழந்தைகளைக் சேர்த்துவிட்டுச் செல்கிறார்கள். இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா? நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மலையம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளிதான் அது. பெற்றோர்களை அந்தப் பள்ளியை நோக்கி வரவைத்திருப்பவர், அந்தப் பள்ளியின் ஆசிரியர் செந்தில். தமிழக அரசால் 1975-ம் ஆண்டு மலையம்பாளையம் ஆதிதிராவிடர் குழந்தைகளுக்காகத் தொடங்கப்பட்டது தான் இந்த ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி. 17 மாணவர்களைக்கொண்டு துவங்கிய இந்தப் பள்ளிக்கு, 2000-ல் ஆசிரியராக வந்தார் செந்தில். அப்போது 43 மாணவர்கள் படித்துக்கொண்டிருந்தனர். கல்வி போதிப்பதில் ஆர்வமும் சமூக அக்கறையும்கொண்ட ஆசிரியர் செந்தில், பக்கத்து ஊர்களில் இருக்கும் குழந்தைகளை இந்தப் பள்ளியில் சேர்க்கச் சொல்லிக் கேட்டபோது, ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஆதிதிராவிடர் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு அனுப்ப மற்றவர்கள் மறுத்துவிட, தன்னிடம் படிக்கும் 43 மாணவர்களையும் திறமைமிக்கவர்களாக உருவாக்கினார். மாலை நேரத்தில், அந்த மாணவர்களைப் பக்கத்து ஊர்களுக்கு அழைத்துச்சென்று, அவர்களின் அறிவாற்றலை வெளிக்காட்டச் செய்தார். இதைக் கவனித்தவர்கள், தங்கள் வீட்டுக் குழந்தைகளையும் அந்தப் பள்ளியில் சேர்க்க ஆரம்பித்தனர். இப்போது, அரசு அதிகாரிகள், வசதி படைத்தோர் எனப் பல தரப்பினரும் இங்கே தங்கள் குழந்தைகளைச் சேர்க்க முந்துகின்றனர். ஆனாலும் ஏழை மாணவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. தற்போது இந்தப் பள்ளியில், பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த 185 மாணவர்கள் படிக்கின்றனர். இந்த ஆண்டு மட்டும் 80 குழந்தைகள் மெட்ரிக் பள்ளிகளில் இருந்து மாற்றல் வாங்கி இங்கே சேர்ந்திருக்கிறார்கள். ஓராசிரியர் பள்ளியாக இருந்த இந்தப் பள்ளியில், இன்று ஐந்து ஆசிரியர்களுடன் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பாக இரண்டு ஆசிரியர்களும் பணிபுரிகின்றனர். மேலும் வேன் வசதியும் வந்துள்ளது. இது எப்படிச் சாத்தியமானது? ''முதலில் குழந்தைகளுடன் நெருங்கிப் பழகி, அவர்களை நண்பர்களாக ஆக்கிக்கொள்கிறோம். அவர்களை மிரட்டுவதோ, அடிப்பதோ கிடையாது. நான்காம் வகுப்பு வரை செயல்வழிக் கற்றல் முறைப்படி எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் வார்த்தைகளை ஒரு புத்தகமாகத் தயாரித்துக் கொடுக்கிறோம். படங்களைப் பார்த்து அவர்களாகவே புரிந்துகொள்ளத் தேடல் ஆர்வத்தை ஏற்படுத்துகிறோம். ஆங்கில இலக்கணத்தை புரியும்படிச் சொல்லிக்கொடுக்கிறோம். பெற்றோர்களிடம் தினமும் குழந்தைகளைப் பற்றிப் பேசுகிறோம். நம்மால் முடிந்ததைச் சரியாகச் செய்தால்தான் பெரிய விஷயத்தையும் சாதிக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ளச் செய்ததால், ஒவ்வோர் ஆண்டும் மாவட்டத்தில் சிறந்த மாணவர்களாக எங்கள் பள்ளி மாணவர்களே திகழ்கின்றனர்'' என்றார் செந்தில். அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க பலர் தயங்கும் இந்தச் சூழலில், மலையம்பாளையம் அரசுப் பள்ளியில் சேர முண்டியடிக்க வைத்த ஆசிரியர் செந்தில், நிச்சயம் ஒரு கனவு ஆசிரியரே!

பகுதி நேர கணினி பயிற்றுநர்களை நியமனம் செய்ததற்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

இருண்ட எங்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்த தமிழக மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு, அனைத்து பகுதி நேர பயிற்றுநர்கள் சார்பாக பல கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். எங்கள் பணிகளை செவ்வனே செய்கிறோம் என்பதில் தங்களுக்கு ஐயமில்லை. 16549 பகுதி நேர ஆசிரியர்கள், ஆசிரியர்களின் குடும்பங்கள், மற்றும் உறவினர்களும் என்றென்றும் தங்களுக்கு கடமை பட்டு உள்ளோம். தாய் என்பவள் தான் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு மட்டுமே. அம்மா என்பவள் தான் பெற்றெடுத்த பிள்ளைகளின் துன்பங்களை மட்டும் போக்குவாள். ஆனால் தங்களோ தமிழ்நாட்டையே பெற்றெடுத்து அனைத்து மக்களையும் தம் பிள்ளைகளாய் எண்ணி பிள்ளைகளின் துன்பங்களை போக்கி அவர்களின் வாழ்க்கையில் ஒளி என்னும் விளக்கு ஏற்றி வைத்த அம்மா. தம் பிள்ளைகளை எப்பொழுதும் கை விட மாட்டீர் என் நம்புகிறோம். “தங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்” “வாழ்க பல்லாண்டு தாயே வாழ்க” “இருண்ட வாழ்வில் ஒளி ஏற்றி வைத்த தெய்வமே” “வாழ்க பல்லாண்டு தாயே”.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்த 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணிநீக்கம் பள்ளி கல்வித்துறை நடவடிக்கை

தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்த 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பல வருடங்களாக கம்ப்யூட்டர் ஆசிரியர்களாக ஏராளமானவர்கள் பணியாற்றினார்கள். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசிடம் முறையிட்டனர். உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். இந்த போராட்டம் பல வருடங்களாக நடந்தது. பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு இந்த நிலையில், அவர்களுக்கு தமிழக அரசு உத்தரவுப்படி ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தியது. அந்த தேர்வில் 50 சதவீத மார்க் எடுத்தவர்கள் முதலில் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டனர். பின்னர் தேர்ச்சி மதிப்பெண் சதவீதம் குறைக்கப்பட்டது. இதனால் 35 சதவீதம் மார்க் வரை எடுத்தவர்களும் கம்ப்யூட்டர் ஆசிரியர்களாக பணி அமர்த்தப்பட்டனர். இவர்கள் பி.எட். படிக்காதவர்கள். இந்த நியமனத்தை எதிர்த்து பி.எட். படித்தவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், பி.எட். படிக்காமல் பணிபுரியும் 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்களின் பணி நியமனம் செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. பணி நீக்கம் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்களை பணி நீக்கம் செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. இது பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.