தமிழக மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு பல கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
Monday, July 29, 2013
பகுதி நேர கணினி பயிற்றுநர்களை நியமனம் செய்ததற்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
இருண்ட எங்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்த தமிழக மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு, அனைத்து பகுதி நேர பயிற்றுநர்கள் சார்பாக பல கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
எங்கள் பணிகளை செவ்வனே செய்கிறோம் என்பதில் தங்களுக்கு ஐயமில்லை. 16549 பகுதி நேர ஆசிரியர்கள், ஆசிரியர்களின் குடும்பங்கள், மற்றும் உறவினர்களும் என்றென்றும் தங்களுக்கு கடமை பட்டு உள்ளோம்.
தாய் என்பவள் தான் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு மட்டுமே. அம்மா என்பவள் தான் பெற்றெடுத்த பிள்ளைகளின் துன்பங்களை மட்டும் போக்குவாள்.
ஆனால் தங்களோ தமிழ்நாட்டையே பெற்றெடுத்து அனைத்து மக்களையும் தம் பிள்ளைகளாய் எண்ணி பிள்ளைகளின் துன்பங்களை போக்கி அவர்களின் வாழ்க்கையில் ஒளி என்னும் விளக்கு ஏற்றி வைத்த அம்மா. தம் பிள்ளைகளை எப்பொழுதும் கை விட மாட்டீர் என் நம்புகிறோம்.
“தங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்”
“வாழ்க பல்லாண்டு தாயே வாழ்க”
“இருண்ட வாழ்வில் ஒளி ஏற்றி வைத்த தெய்வமே”
“வாழ்க பல்லாண்டு தாயே”.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment